Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்து ,நிலையில், கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,000க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் ரூ.63,000 என்ற விலைக்கு குறையாமல் இருந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை (மார்ச் 1ம் தேதி) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940க்கும் விற்பனையானது. ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையானது. இந்நிலையில் நேற்று (மார்ச் 3ம் தேதி) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.7,940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 107க்கு விற்பனை செய்யப்படுகிறது.