Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது : தெற்கு ரயில்வே

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே துறைக்கு ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைகிறது. கே.சி.பி.டி. மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.பயணிகள் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இம்மாதத்துக்குள் முடிவடையும் என்று சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

முடிச்சூரில் 5 ஏக்கரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதிகள் ரூ.27.68 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 300 பணியாளர்களுக்கான தங்குமிடம், குடிநீர், கழிப்பிட வசதி, உணவகங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 6 மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மாநில அரசுடன் ரயில்வே இணைந்து கிளாம்பாக்கம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடங்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.