Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !!

லூதியானா: 4 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் காடி, விசாவதர் ஆகிய 2 பேரவை தொகுதிகள், கேரளாவில் நிலாம்பூர் பேரவை தொகுதி, பஞ்சாப்பில் லூதியானா மேற்கு பேரவை தொகுதி மற்றும் மேற்குவங்கத்தில் காளிகஞ்ச் பேரவை தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் படி, குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் TMC தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் 10,792 வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையை தொடர்ந்து பாஜக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜகவும், மற்றொரு தொகுதியில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கின்றன.