சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கதொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வினோத், 20 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்யும் விசாயிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். உழவர் ஏஐ திட்டத்தை செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நச்சு மதிப்பீடு செய்யும் பரிசோதனைக்கு முழுமானியம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.203 கோடியில் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் அமைக்கப்படும். மண்வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டு கொண்டார். சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


