Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம்.!!

டெல்லி: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது.

இந்நிலையில் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-05-2025 முதல் 26-05-2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.