சென்னை: ரூ.227 கோடியில் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24,000 விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கலாம்.
500 விவசாய நிலையங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கப்படும். வட்டார அளவில் 100 தோட்டக்கலை விற்பனை மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறி உள்ளார்.
500 பேருக்கு வேளாண் டிரோன் இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், இதற்காக 50 சதவீத மானியத்தில் டிரோன் வழங்கப்படும் என்றார். 1,000 விவசாயிகளுக்கு தனித்து சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும். வேலூர் மாவட்டத்தில் அரசு பண்ணையில் ரூ.2 கோடி செலவில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். நடப்பாண்டு தஞ்சையில் வேளாண் கண்காட்சி நடத்தப்படும். ரூ.23 கோடியில் தமிழ்நாடு விவசாயிகள் வருமானம் மேம்பாட்டு ஆணையம் சென்னையில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்து உள்ளார்.


