Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

98.26% ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

டெல்லி: 98.26% ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023, மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சி இருந்தபோதிலும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. மொத்த நாணய மதிப்பில் 86 சதவிகிதமும், மொத்த அளவில் 40.9 சதவீதம் பங்களிப்பும் கொண்டு ரூ.500 நோட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. கள்ளநோட்டை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.