Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவையில் கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை க.க.சாவடி அருகே காரை வழிமறித்து கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா பாலக்காட்டில் ஜே.பி. ஜுவல்லரியை நகை வியாபாரிகள் ஜெய்சன், ஜேக்கப் நடத்தி வருகின்றனர். திருச்சூரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோர் சென்னையில் தங்கம் வாங்கிச் சென்றுள்ளனர். கோவையில் இருந்து 1.25 கிலோ தங்க நகைகளுடன் 2 பேர் காரில் கேரளா நோக்கிச் சென்றுள்ளனர்.

கோவை-கேரள எல்லையான க.க.சாவடி அருகே கார் சென்ற போது லாரியை குறுக்கே நிறுத்தி 5 பேர் கொண்ட கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. நகைகளுடன் சென்ற காரை பின்தொடர்ந்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டடியுள்ளனர். கோவை க.க.சாவடி வழியாக கேரளா செல்லும் போது காரில் நோட்டமிட்ட கும்பல், 1.25 நகைகளை பறித்துச் சென்றது. காரில் இருந்த 2 பேரிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 1.25 கிலோ நகைகளுடன் 5 பேர் தப்பினர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.