74000 பேர் பனிலிங்க தரிசனம்
Advertisement
ஜம்மு: அமர்நாத் யாத்திரை தொடங்கி 5 நாட்களில் 74000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 29ம் தேதி தொடங்கியது. 6வது நாளான நேற்று அதிகாலை 5725 பேர் கொண்ட குழு 256 வாகனங்களில் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றது. இவர்களில் 3211 பேர் பாஹல்காம் வழியாகவும், 2514 பேர் பால்டால் வழியாகவும் யாத்திரை மேற்கொள்கின்றனர். யாத்திரை தொடங்கி 5 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை மொத்தம் 74000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
Advertisement