Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

சென்னை: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான VBJ, வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், வளையல்களின் அழகையும் பல்வேறு வடிவங்களையும் கொண்டாடும் வகையில் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ என்ற ஒரு மாத சிறப்பு விழாவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5, 2026 வரை நடைபெறும் இந்த விழாவில், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகள் இடம்பெறும்.

தினசரி அணிவதற்கான எளிய வடிவங்கள் முதல் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு தருணங்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. VBJ-யின் அனைத்து ஷோரூம்களிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்தக் கலெக்க்ஷன் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப, 10 நாட்களுக்குள் வளையல்களை தனிப்பயனாக்கும் வசதியும்

VBJ வழங்குகிறது.

இதுகுறித்து VBJ-யின் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “வளையல்கள் இந்திய நகை மரபில் எப்போதும் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. அவை பாரம்பரியம் மட்டுமல்ல, பல தனிப்பட்ட நினைவுகளுடனும் இணைந்தவை. ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ மூலம், தலைமுறைகள் கடந்தும் வளையல்கள் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை கொண்டாட விரும்புகிறோம்,” என்றார்.

VBJ-யின் மற்றொரு நிர்வாக பங்குதாரர் ஜிதேந்திர வும்மிடி கூறுகையில், “10,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த விழா, ஒவ்வொரு நிகழ்வு மற்றும் தனிப்பட்ட விருப்பத்திற்கும் ஏற்ற வளையலை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது. வளையல்களின் பல்வகைத் தன்மையையும் கைவினைத்திறனையும் கொண்டாடுவதே இதன் நோக்கம்,” என்றார்.

ஐந்து தலைமுறைகளாக குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் VBJ, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் முக்கிய அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமைக்குரியது. இந்தியாவின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்துடனான VBJ-யின் நீண்டகால தொடர்பை இது பிரதிபலிக்கிறது.

தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்து, VBJ விரைவில் கோயம்புத்தூரில் புதிய ஷோரூமைத் தொடங்க உள்ளது, இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தனது தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நகை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல உள்ளது.