ஷேக்ஹசீனா பேட்டி இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் ஊடகங்களை தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று டாக்காவில் உள்ள இந்திய தூதரக துணை ஆணையரை சம்மன் செய்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் முக்கிய இந்திய ஊடகங்களுடனான தொடர்பு குறித்து கடுமையான கவலை தெரிவித்துள்ளது. தலைமறைவான பிரதமர் ஷேக் ஹசீனா ஹசீனா ஊடகங்களை அணுகுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்குமாறு இந்திய தூதரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement