Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வங்கதேச அதிபர் விரைவில் பதவி விலகல்?

டாக்கா: வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் விரைவில் பதவி விலக உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.  வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் முந்தைய ஆட்சியில் அதிபர் பதவியேற்ற முகமது ஷஹாபுதீன், அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். இந்த சூழலில் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.

அதேசமயம், அண்மையில் முகமது ஷஹாபுதீன் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக வங்கதேச நாளிதழ் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. ஆனால் “முகமது ஷஹாபுதீன் பதவி விலகலுக்கு ஷேக் ஹசீனாவுடன் பேசிய விவகாரம் மட்டுமே காரணம் அல்ல என்றும் கூறப்படுகிறது.