தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்துடன் இன்று 2வது டி20: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

Advertisement

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. குவாலியரில் நடந்த முதல் டி20ல் இந்தியா 7 விக்கெட் வித்தியாத்தில் எளிதாக வென்று 1-0 என முன்னிலை வகிக்க, இன்று 2வது போட்டி டெல்லியில் நடக்கிறது. சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்துவதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. பந்துவீச்சில் அர்ஷ்தீப், வருண், மயாங்க், சுந்தர், ஹர்திக் அசத்திய நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 11.5 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. நஜ்முல் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சவாலை சமாளிக்க காத்திருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயாங்க் யாதவ்.

வங்கதேசம்: நஜ்மல் உசைன் ஷான்டோ (கேப்டன்), பர்வேஸ் உசைன், லிட்டன் தாஸ், ஜாகிர் அலி (விக்கெட் கீப்பர்கள்), மஹேதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் உசைன், முஸ்டாபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சாகிப், ஷோரிஃபுல் இஸ்லாம், ரகிபுல் ஹசன்.

Advertisement