Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்தனர்.

சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் தொடர் மின்தடை காரணமாக பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் மின்வாரியத்தைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈசிஆர் சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் நேற்று இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 2:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும், மின்தடைக்கான காரணம் குறித்து பொதுமக்களிடம் மின்வாரியம் முழுமையாகத் தெரிவிக்காததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியல் போராட்டம் தொடர்ச்சியாக நீடித்தது. மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தும் தங்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.