Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பஜாஜ் பல்சார் என் 250

பஜாஜ் நிறுவனம் பல்சார் என்250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 249.07 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 21.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் புதிய கிராபிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி உள்ளது. போன் அழைப்புகள், பைக்கை சர்வீஸ் செய்ய நினைவூட்டல் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ரெயின், ரோடு, ஆஃப் ரோடு என்ற மூன்று ஏபிஎஸ் மோட்கள், அகலமான பின்புற டயர்கள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் வலை சுமார் ரூ.1.51 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.