பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, பல்சார் 180 மோட்டார் சைக்களை அறிமுகம் செய்துள்ளது. பல்சார் 180 உற்பத்தியை 2022ம் ஆண்டுடன் இந்த நிறுவனம் நிறுத்தியிருந்தது. இது பல்சார் 150 மற்றும் பல்சார் 220 எப் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருக்கும். புதிய பல்சார் 180 பைக்கில் 178.6 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 16.7 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் ஷாக் அப்சர்கர்கள் உள்ளன. இரு புறமும் டிஸ்க் பிரேக், 17 அங்குல வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் இடம் பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லாம்ப், பிளிங்கர்கள், டிஜிட்டல் கன்சோல் உள்ளது. இத்துடன் புளூடூத் இணைத்து பயன்படுத்தும் வசதியும் உண்டு. ஷோரூம் விலை சுமார் ரூ.1,22,490 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+


