Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஜாஜ் டாமினார் 400

பஜாஜ் நிறுவனம், புதிய டாமினார் 400 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் டிரையம்ப் வரிசையில் புதிய 349 சிசி மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்த பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 40 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்து விடும். இந்த அடிப்படையில் தான், புதிய டாமினார் 400 மோட்டார் சைக்கிளிலும் 349 சிசி சிங்கிள் லிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 40 எச்பி பவரையும்,7,500 ஆர்பிஎம்-ல் 33.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 50 சிசி குறைந்ததால் பவர் 0.6 எச்பியும், டார்க் 1.8 என்எம் குறைந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் விலை சுமார் ரூ.2.04 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 400 சிசி மோட்டார் சைக்கிள் விலையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.37,000 குறைவு.