லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உமா சங்கர் சிங், உடல்நல குறைவால் காலமானார். உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் முகமாக திகழ்ந்தவர் உமா சங்கர் சிங். (55). இவர், கடந்த 2012ம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2022 சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்த நிலையில், உமா சங்கர் மட்டும் 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் புற்றுநோயால் நீண்டகாலமாக வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி உமா சங்கர் சிங் உயிரிழந்தார். அவரது உடல் லக்னோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


