Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

திட்டக்குடி: கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த கொரக்கவாடியை சேர்ந்தவர் ராமர் மனைவி காசியம்மாள். நிறைமாத கர்ப்பிணி. அவர் நேற்று காலைமருத்துவ பரிசோதனைக்காக திட்டக்குடியில் இருந்து மங்களூர் அரசு மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். கொத்தனூர் அருகே பஸ் சென்ற போது திடீரென காசியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கண்டக்டர் வெங்கடாசலம் மற்றும் டிரைவர் ராஜமாணிக்கம் சாலையோரமாக பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர்.

அதில் வந்த மூதாட்டி ஒருவர் காசியம்மாளுக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து தாய் மற்றும் சேயை மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.