Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணமேல்குடியில் தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம்

அறந்தாங்கி:மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடு த்தல் தொடர்பான விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றதமணமேல்குடி வட்டார வள மையத்தில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாமினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சசிகலா தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் மற்றும் மணமேல்குடி வட்டார வளமையம் மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பயிற்சியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் புரிந்து கொள்ளுதல், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் குறித்த ஒரு பார்வை, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், வெளிப்படுத்தலை கையாளுதல், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கையாளுபவர்களுக்கு விழிப்புணர்வுகளை கொடுத்தல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் இருந்து முத்து பிரகாஷ் அவர்கள் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் விஜயலட்சுமி ஜெசிந்தா நௌவுலின், ஆசிரியர் பயிற்றுநர் பன்னீர்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர்.