அவரை சாகுபடியில் சில பராமரிப்புகள் அவசியம். அவரைச்செடிகள் வயலில் முளைத்தவுடன், செடிகளை வண்டுகள் துளைத்து சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் செடிகள் காய்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 4 கிலோ மாலத்தியான் (10 சதம்) மருந்தை தூவலாம். வயலில் பூவண்டுகள் தோன்றினால் அவற்றைப் பிடித்து அழித்துவிட வேண்டும். காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அல்லது ரோகர் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அவரை விதையிலும் பயறு வண்டுகள் தோன்றும். விதைகள் முதிர்ச்சி யடையத் தொடங்கியவுடன் பயறு வண்டின் தாக்குதல் வயலிலேயே தொடங்கிவிடும். அதனைக் கட்டுப்படுத்த அறுவடைக்கு 10 நாள் முன்னர் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி எண்டோசல்பான் மருந்தைக் கலந்து காய்களின் மேல் தெளிக்க வேண்டும். அவரையில் ஆன்த்ரக்னோஸ் இலைப்புள்ளி நோய் தாக்கவும் வாய்ப்பு உள்ளது. செடிகளுக்கு ஒரு லிட்டர் நீரில் 1 கிராம் பெவிஸ்டின் அல்லது 4 கிராம் மான்கோசெப் பூசணக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றைக் கலந்து தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
+
Advertisement

