Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!..

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிகட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து நடத்தின மதுரை மாநகராட்சி சார்பில் 51.18 லட்ச ரூபாய் செலவில் வாடிவாசல் மாடுபிடி வீரர்களுக்கான முன்னேற்பாடுகள் காளைகளுக்கு முன்னேற்பாடுகள் என்று அனைத்தையும் டெண்டர் விடப்பட்டு பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டன.

வழக்கமாக சுத்து வாடிவாசல் இல்லாமல் ரயில் தண்டவாள அமைப்பில் நீளமான வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் வாடிவாசல் ஆரம்பித்து மாடு சேகரிக்கும் இடம் வரை 1.8 கிமீ தூரத்திற்கு 8 அடி உயரத்தில் இரும்பு கிராதி கொண்டு இரு அடுக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் தகுதி சான்றிதழ் பெற்ற காளைகள் பதியப்பட்டு அதில் 1100 காளைகள் பங்கேற்க டோக்கன் ஆன் லைன் மூலம் வழங்கப்பட்டது.

அதே போல் மாடுபிடிவீர்கள் ஆன்லைன் மூலம் பதியப்பட்ட 900 பேருக்கு பங்கேற்க ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று காலை 7 மணி அளவில் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். இதில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பூமிநாதன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 10 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 800க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு50 பேர் என பேர் களமிறங்கினர். கால்நடை துறை சார்பில்கால்நடைத்துறை 21 மருத்துவர்கள் தலைமையில் 65 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் காளை பரிசோதனையில் 21 காளைகள் போலி டோக்கனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

அதேபோல் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி இந்திரா தலைமையில் 75 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்த பின் களத்திற்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர் மேலும் எலும்பு முறிவு கண்டறிய அறிய நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையாளர்கள் பத்து உதவி ஆணையாளர்கள் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்த மாடு பிடி வீரர்களில் மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்கள் 629 பேர், தகுதி நீக்கம் 29 பேர், இவர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக மொத்தமாக ரூ 1 கோடி insurance செய்யப்பட்டிருந்தது. உயிரழப்புக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை, குடிநீர் வசதி காளைகளுக்கு உணவு, நீர். மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் 2 இடங்களில் எல்இடி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் பரிசாக மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் சார்பில் காரும், 2, 3-ம் பரிசாக பைக் மற்றும் கன்றுடன் கூடி பசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக் கான முதல் பரிசாக முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் டிராக்டர், மேயர் சார்பில் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.