ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 450 அப்ரன்டிஸ்கள்
1. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): (மெக்கானிக்கல்-30, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-10, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி-20, சிவில் இன்ஜினியரிங்-15, ஆட்ேடா மொபைல் இன்ஜினியரிங்-15, புரடக்ஷன்/ மெட்டலர்ஜி/டூல் இன்ஜினியரிங்/இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/சிஏடி-சிஏஎம்/மெக்கானிடிரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துணைப் பிரிவுகள். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 250 இடங்கள். (பி.காம்-100, பிசிஏ (கம்ப்யூட்டர்)-75, மற்ற பட்டதாரிகள்- பிஏ, பிஎஸ்சி, பிபிஏ, பிபிஎம்-75). தகுதி: பயிற்சி வழங்கப்படும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 50 இடங்கள். (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 25, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்-7, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்-5, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்-3, சிவில் இன்ஜினியரிங்-5, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்-5). தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினியரிங்/இன்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.16,200ம் உதவித் தொகையாக வழங்கப்படும். 2022ம் கல்வி ஆண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘எஸ்டாபிளிஷ்மென்ட் நேம் லிஸ்ட்டை’ கிளிக் செய்து, அதிலிருந்து இன்ஜின் பேக்டரி, ஆவடியை தேர்வு செய்து அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டப்படிப்பு/டிப்ளமோ வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் விவரம் ஏப்.30ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.
நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் நாள்: 06.05.2026, 08.05.2026.