தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர்: போலீசாரிடம் தப்பிக்க ஓடியதில் கால் முறிந்தது

 

Advertisement

நாகர்கோவில்: மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த தம்பதி, 3 குழந்தைகளுடன் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழாவுக்கு கடந்த 2ம் தேதி வந்து பலூன் வியாபாரம் செய்தனர். பின்னர், கடந்த 6ம் தேதி மதியம் சொந்த ஊர் செல்ல நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சென்றனர். இரவில் ரயில் என்பதால் ரயில் நிலையம் அருகே ரோட்டோரத்தில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அன்பாக பேசிகுழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதாக கூறி தூக்கி சென்றார். 1 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் திரும்பி வராததால் பல இடங்களில் தேடிவிட்டு திரும்பி வரவில்லை. இதுபற்றி மாலை 6 மணியளவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் குழந்தையை ஆட்டோவில் ஏற்றி ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலையில் செல்வதும், குழந்தையை கடத்தியது கோட்டார் பகுதியை சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்றும், பார்வதிபுரம் அருகே இறச்சக்குளம் - ஆலம்பாறை ரோட்டில், மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இரவில் காட்டு பகுதியில் தனிப்படையினருடன் எஸ்.பி. ஸ்டாலினும் பைக்கில் ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அங்கு யோகேஷ்குமாரின் ஆட்டோவை கண்டுபிடித்தனர். உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதில் அவரது கால் முறிந்தது. கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை அனைவரும் பாராட்டினார்.

Advertisement