புதுடெல்லி: ஆஸ்திரேலியா ஏ அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புதுவையில் அக்டோபர் 6, 9, 11 தேதிகளில் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக இரு அணிகளும் இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டியிலும் (செப். 22-25 மற்றும் செப். 29 - அக்.2) மோதுகின்றன.
இந்த தொடர்களுக்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 நாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக தேவ்தத் படிக்கல், ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக், வைஷாக் இருவரும் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்..
இந்தியா ஏ (ஒருநாள்): கெயிக்வாட் (கேப்டன்), படிக்கல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், பிரியன்ஷ் ஆர்யா, ரஜத் பத்திதார், குமார் குஷக்ரா (கீப்பர்), நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், அர்ஷின் குல்கர்னி, அர்ஷத் கான், நமன் திர், ஹர்திக் பாண்டியா, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), குர்ஜப்னீத் சிங், யஷ் தாகூர்.
இந்தியா ஏ (4 நாள்): படிக்கல் (கேப்டன்), அமான் மொகாடே, ஆயுஷ் பாண்டே, சாய் சுதர்சன் (துணை கேப்டன்), யஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமார் குஷக்ரா, ஷாம்ஸ் முலானி, தணுஷ்கோடியன், துஷார் தேஷ்பாண்டே, அன்ஷுல் காம்போஜ், பிரபுல் ஹிங்கே, என்.ஜெகதீசன், நசிகேத் பூட்டே, வி.வைஷாக்.

