மும்பை: ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் 4நாள் போட்டிகளில் விளையாட உள்ள இந்தியா யு-19 அணியில் முன்னாள் நட்சத்திர வீரர்கள் ராகுல் டிராவிட், வீரேந்திர சேவக் மகன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான (செப். 18, 21, 23) இந்தியா யு-19 அணியின் கேப்டனாக லக்ஷியா ராய்சந்தானி, துணை கேப்டனாக யஷ்பர்தன் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4நாள் போட்டிகளில் (செப். 27-30, அக். 5-8) சவுகான கேப்டனாகவும், ராய்சந்தானி துணை கேப்டனாகவும் செயல்படுவர். முன்னாள் நட்சத்திரங்கள் டிராவிட் மகன் அன்வய் டிராவிட், சேவக் மகன் ஆர்யவீர் சேவக் இருவரும் ஒருநாள் போட்டிகளுக்கான யு-19 அணியில் விளையாட உள்ளனர். 2வது 4நாள் போட்டி அகமதாபாத்திலும், மற்ற போட்டிகள் ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளன.



