Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு மிரட்டல்

மெல்போர்ன்: பிரதமர் மோடி விரைவில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 9 ம் தேதி மெல்போர்னில் மார்வல் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது தொடர்பாக பிரதமருக்கு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பான பேஸ்புக் பதிவில் அபு முஸ்தபா என்ற நபர் அளித்த பதிலில் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டறிந்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தவும், விசாரணை குறித்தும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த மிரட்டலை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பிரதமர் வருகையின் போது உச்சபட்ச பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.