ஆடி நிறுவனம், எஸ்கியூ8 என்ற எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூ8 மற்றும் ஆர்எஸ் கியூ 8 ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்டதாக இது இருக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்கியூ 8 காரில் ஆர்எஸ் கியூ 8ல் உள்ள 4.0 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு வி8 இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 507 எச்பி பவரையும் 770 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்டாண்டர்டு வேரியண்டில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 349 எச்பி பவரையும் 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது.
எஸ்கியூ 8 எஸ்யுவி கூபே எஸ்யுவி வடிவமைப்பில் இடம் பெற்றுள்ளது. ஹனி கோம்ப் வடிவ கிரில் இடம் பெற்றிருக்கும் எனவும், ஹெட்லாம்ப், பம்பர் வடிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதுதவிர ஏர்பேக், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்,டயரில் காற்று அழுத்தத்தை அளவிடும் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.


