ஆடி இந்தியா நிறுவனம், எஸ்கியூ8 காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆர்எஸ் கியூ8ல் உள்ள 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 570 எச்பி பவரையும் 770 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4.1 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். இந்தக் காரில் ஹனிகோம்ப் வடிவ கிரில்கள், எல்இடி ஹெட்லாம்ப்கள், பெரிய பம்பர்கள் உள்ளன. இதுதவிர இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என 12.3 அங்குல இரட்டை டிஸ்பிளேக்கள் உள்ளன. பி அண்ட் ஓ மியூசிக் சிஸ்டம், மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூப், முன்புற பவர் சீட்டுகளில் ஹீட்டிங், மசாஜ் வசதிகளும் உள்ளன. ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள், டயரில் காற்று அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
+
Advertisement

