தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Advertisement

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. வாரச்சந்தைகளில் கிலோ ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், அண்ணா நகர், அய்யனார்கோவில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மண்ணூத்து, சிறப்பாறை, வண்ணாத்திப்பாறை, வாலிப்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கத்தரிக்காய்களை மதுரை, தேனி, ஆண்டிபட்டி, கம்பம் சின்னமனூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட வாரச்சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

இந்தாண்டு உரிய நேரத்தில் மழை பெய்ததால் மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், வாரச்சந்தைகளில் கத்தரிக்காய் கிலோ ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், கத்தரி விவசாயத்துக்கு தேவையான பூச்சி மருந்து, உரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மானிய விலையில் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு உரிய நேரத்தில் பெய்த மழையால் கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. வாரச்சந்தைகளில் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது. இதனால், மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News