Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு…

*கர்ப்பிணிப் பெண்ணுக்கு மசக்கை காலத்தில் வாந்தி, தலைவலி, களைப்பு, சோர்வு ஆகியவைகள் அதிகமாக இருக்கும்.

*வாந்தி அதிகமாக இருந்தால் டாக்டர் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாம்.

*சோப்பை முகர்ந்தால் வாந்தி நிற்கும்.

*காபியை தவிர்த்து நிறையத் தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

*ஓய்வெடுக்கலாம். அடிக்கடி குட்டித் தூக்கம் போடலாம்.

*சமையலறை தாளிப்பு வாசனையில் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

*வாய் கசப்பாக இருந்தால் சுவையானப் பதார்த்தங்களைக் கொறிக்கலாம். அடிக்கடி வாயைச் சுத்தப்படுத்தவும்.

*அவ்வப்போது உலர் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கூடி வாந்தி நிற்கும்.

*அசைவத்தை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. காரம், எண்ணெய் மிகுதியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

*வாந்தி வருகின்றது என்பதற்காக சாப்பிடாமல் இருக்கக் கூடாது. புரதம், நார்ச் சத்து நிறைந்த உணவுகளை இடையிடையே முடிந்தளவு சாப்பிட்டு வருவது நல்லது.

*முடிந்தளவு அதிகாலை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற் கொள்ளலாம். தன்னால் முடிந்த சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருப்பது நல்லது.

*கர்ப்பமான பெண்களுக்கு இடுப்பு வலித்தால் பாலில் மிளகுப் பொடியைப் போட்டுக் குடித்தால் இடுப்பு வலி தீரும்.

*மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

*மனதை சமநிலையில் பார்த்துக் கொள்வது நல்லது.

*சந்தோசமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு மனதை லேசாக வைத்துக் கொள்வது நல்லது.

*கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

*பிரசவ காலத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே அரை சங்கு வீதம் தினமும் துளசிச் சாற்றைச் சாப்பிட்டு வந்தால் கஷ்டமின்றி சுகப்பிரசவம் ஏற்படும்.

*கர்ப்ப காலத்தில் சுற்றி இருக்கும் குழந்தைகளுடன் பழகி வருவது மிகவும் நல்லது.

*எள் கலந்த உணவுகளை, பப்பாளிப் பழத்தை தவிர்ப்பது நல்லது.

*வயிற்றில் குழந்தை இருப்பதால் அதற்கும் சேர்த்து சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

*முடிந்தளவு பட்டினி போடாமல் நேரத்திற்குச் சாப்பிடுவது அவசியம்.

*காற்றோட்டமான இடங்களில் இருக்க முயற்சிக்க வேண்டும்.

*பெரும்பாலும் மிதமான சூட்டில் நீரைக் குடித்து வருவது நல்லது.

*கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் ஆகியவற்றை தவிர்க்கலாம். விசேஷ வீடுகளிலும் சிலர் அன்னாசி ரசம் கொடுக்கிறார்கள். எனவே குழந்தைப் பிறக்கும் வரை வெளிப்புற ஆகாரங்களை கவனமாக சாப்பிடுவதும் அவசியம்.

- இரா. ரெங்கசாமி