Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சர்வதேச செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் பணம் பறிக்க முயற்சி

சென்னை: சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(81). தொழிலதிபரான இவர், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தனின் மாமனார் ஆவார். இவரை கடந்த 18ம் தேதி வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நான் கர்நாடகா மாநில போலீஸ் என்றும், உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வாடகை கார் ஒன்று பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்படுத்திவிட்டதாகவும், இதனால் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி பேசியுள்ளார். அதற்கு ஆனந்த் மாமனார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், உங்கள் வங்கி உள்ளிட்ட விபரங்களை எனக்கு உடனே அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் மாமனார், சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்த போது, இது மோசடி நபர்களின் வேலை என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சென்னை பெருநகர கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆனந்த் மாமனார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் கர்நாடகா காவல்துறை என வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.