Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முன்னாள் பாக். பிரதமர் இம்ரானை சிறையிலேயே கொல்ல முயற்சி: மகன்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

லண்டன்: சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன்களான சுலைமான் மற்றும் காசிம், தங்கள் தந்தையின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறையிலேயே அவரை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி 21 சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் சமீபத்தில் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் அனுப்பினர்.

அதில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக் அதர்டன் லண்டனில் வசிக்கும் இம்ரான் கானின் மகன்களான சுலைமான் மற்றும் காசிம் ஆகியோரிடம் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் தனது தந்தையின் தற்போதைய நிலை குறித்து கவலைகளை வெளிப்படுத்திய காசிம் கூறுகையில், அவர்கள்(பாக்.அரசு) என்ன செய்கிறார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. அவர்கள் அவரை அங்கேயே அப்பட்டமாகக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவரை முடிந்தவரை அங்கேயே வைத்திருக்கவும், எப்படியாவது அவரை அமைதியாக்கிவிடவும் விரும்புகிறார்கள்.

கடைசியாக அவர் எங்கள் அத்தைகளிடமும் மற்றவர்களிடமும் பேசியபோது, ​​சமீபகாலமாக நிலைமைகள் மிகவும் மோசமடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். தற்போது நிலைமை முன்னெப்போதையும் விட மோசமாக உள்ளது என்றார். சுலைமான் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இம்ரான் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பரிசோதனை முடிந்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இம்ரானை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதிக்கவில்லை. அவர்கள் என்ன மறைக்கிறார்கள் என்பது நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு பாரபட்சமற்ற, நடுநிலையான மருத்துவரால் அவரைப் பற்றி அறிக்கை வெளியிட அனுமதிக்கவில்லை என்றார்.