தெஹ்ரான்: ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் இருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. ஜூலை மாதத்திற்கு பிறகு ஈரானியப் பகுதி மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். லராக் தீவு, ஹோர்முஸ் தீவின் தெற்கிலும், கெஷ்ம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது. தெஹ்ரானிலிருந்து, லராக் ஈரானியத் தலைநகரின் தென்கிழக்கு திசையில் சுமார் 1,100 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளுடன் ராக்கெட்டுகளை ஏவ ஈரான் திட்டமிட்டதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் நீரிணை நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் லராக் தீவில் ராக்கெட் லாஞ்சர்களை அமெரிக்கா தாக்கியது. இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை ஈரான் ராணுவம் தாக்கியுள்ளது. அமெரிக்க ராணுவ நிலைகளை தாக்கிய வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவும், ஈரானும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.



