Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உதவி பதிவுத்துறை தலைவர்கள் 2 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: உதவி பதிவுத்துறை தலைவர்கள் 2 பேருக்கு துணை பதிவுத்துறை தலைவராக பதவிஉயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்த உத்தரவு: 2024-25ம் ஆண்டிற்கான துணை பதிவுத்துறை தலைவர் முறையான தேர்ந்தோர் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இரண்டு பேருக்கு துணை பதிவுத்துறை தலைவராக பதவி உயர்வு மற்றும் பணிநியமனம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அப்பட்டியலில் வரிசை 3 மற்றும் 4ல் இடம் பெற்றுள்ள உதவி பதிவுத் துறை தலைவர்கள் எஸ்.சத்தியப்பிரியா மற்றும் கே.மீனாகுமாரி ஆகியோருக்கு துணை பதிவுத்துறை தலைவர்களாக பதவி உயர்வு வழங்கி அரசு ஆணையிடுகிறது. துணை பதிவுத்துறை தலைவர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட சத்தியப்பிரியா தற்போது காலியாக உள்ள திருச்சி துணை பதிவுத்துறை தலைவராகவும், மீனாகுமாரி சென்னை துணை பதிவுத்துறை தலைவராகவும், சென்னை துணை பதிவுத்துறை தலைவராக உள்ள சுவாமிநாதன் திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவராகவும் பணி நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.