கலைக்கல்லூரி மாணவர்களை நாற்காலியால் தாக்கிய உதவி பேராசிரியர் சஸ்பெண்ட்!
07:41 AM Apr 19, 2025 IST
Share
Advertisement
பழனி: கலைக்கல்லூரி மாணவர்களை நாற்காலியால் தாக்கிய உதவி பேராசிரியர் கௌதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாற்காலியை கொண்டு மாணவர்களை கௌதம் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. உதவி பேராசிரியர் கௌதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் புகார் அளித்தனர். பேராசிரியர் கௌதம் மாணவர்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.