Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணி

யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு

தேர்வு: யுஜிசி நெட் தேர்வு-2026.

தகுதி: கலை/அறிவியல்/மேலாண்மையியல்/பொருளாதாரம்/மானுடவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏதொவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் நெட் தேர்வு நடைபெற்ற தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி/ஒபிசி (நான் கிரிமீலேயர்) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: நெட் தேர்வு எழுதி உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. பி.ஹெச்டி படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள்/ திருநங்கைகள் பிரிவினருக்கு 5 வருட சலுகை வழங்கப்படும். வயது வரம்பானது 01.06.2026 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.

நெட் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. தாள்-1ல் விண்ணப்பதாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்.

தாள்-2 ல் விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு எழுத 2 மணி நேரம் வழங்கப்படும். தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டில் நடைபெற்ற தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் ஆகியவை யுஜிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், நெல்லை, தஞ்சை ஆகிய மையங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் உத்தேச தேதிகள்: 22.06.2026 முதல் 30.06.2026 வரை.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,150/-. ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2026.