Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மெட்ராஸ் ஐஐடியில் உதவிப் பேராசிரியர்கள் வேலை

பணி: உதவி பேராசிரியர். மொத்த இடங்கள்: 40. காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் விவரம்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், பயோ-டெக்னாலஜி, கெமிஸ்ட்டிரி, கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், டேட்டா சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் டிசைன், ஹூயூமனைடிஸ் மற்றும் சோஷியல் சயின்சஸ், மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மெடிக்கல் சயின்சஸ் மற்றும் டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங், ஓஷன் இன்ஜினியரிங், இயற்பியல், ஸ்கூல் ஆப் இன்டர்டிஸிப்பினினரி ஸ்டடீஸ்.

வயது: 36க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பு: 31.12.2026 தேதியின்படி கணக்கிடப்படும்.

சம்பளம்: ரூ.70,900- ரூ.1,01,500.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று பி.ஹெச்டி பட்டமும் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி தொடர்பான கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம், கற்பிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.  இதுபற்றிய விவரம் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். www. facapp.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2026.