Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இந்தோ- திபெத் எல்லைபடையில் உதவி கமாண்டென்ட்

பணி: உதவி கமாண்டென்ட் (இன்ஜினியர்). 6 இடங்கள். (பொது-4, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது: 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தோ-திபெத் போலீஸ் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில அறிவு, நியூமரிக்கல் ஏபிலிட்டி, சிவில் இன்ஜினியரிங் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம் விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். உடற்திறன் தேர்வில் 100 மீட்டர் தூரத்தை ஆண்கள் 16 வினாடிகளிலும், பெண்கள் 18 வினாடிகளிலும் ஓடி முடிக்க வேண்டும். ஆண்கள் 3.5 மீட்டர் தூரமும், பெண்கள் 3 மீட்டர் தூரமும் நீளம் தாண்ட வேண்டும்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ரூ.400/-.எஸ்சி/எஸ்டி/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2026.