உம்லிங்: அசாம் காங்கிரஸ் எம்பி ரகிபுல் ஹூசைனின் மகன் தன்சில் ஹூசேன். இவர் மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது உம்லிங் பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தன்சில் ஹூசேனின் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது பிளாஷர் லைட்டை தவறாக பயன்படுத்தியதாக தன்சில் ஹூசைனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் வி.எஸ்.ரத்தோர் கூறுகையில், “தன்சில் ஹூசைன் சென்ற காரில் அவரது தந்தையும், எம்பியுமான ரகிபுல் ஹுசைன் காரில் இல்லை. காரில் பிளாஷர் விளக்குகளை அலுவலக பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் பயன்படுத்த முடியாது.எனவே அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.
