புதுடெல்லி: ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற சாதனையாளரான நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் நடப்பு சீசனில் 2 போட்டியில் மட்டுமே பங்கேற்றார்.
கடந்த வாரம் லாசேன் நகரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2026 டைமண்ட் லீக் பைனல்ஸ் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், பயிற்சியின்போது மீண்டும் கணுக்காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, டைமண்ட் லீக் பைனல்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி (நகோயா, செப்.19-அக்.4) உள்பட 2026 சீசனில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.



