ஆசிய யு-17 பேட்மின்டன் தன்வி பத்ரி சாம்பியன்
செங்டு: ஆசிய யு-17 பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி பத்ரி (15 வயது) சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு நகரில் நேற்று நடந்த பைனலில் சக இந்திய வீராங்கனை ஷைனா மணிமுத்துவுடன் மோதிய தன்வி பத்ரி 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இவர் ஏற்கனவே 2024ல் ஆசிய யு-15 சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement