Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆசிய பல்கலை. தரவரிசைப் பட்டியல் முதல் 100 இடங்களில் பெங்களூரு ஐஐசிஎஸ், 5 ஐஐடிக்கள் இடம்பெற்று சாதனை: கடந்தாண்டை விட பின்தங்கின

புதுடெல்லி: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் க்யூஎஸ் நிறுவனம் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக, 34 புதிய பல்கலை.கள் உள்பட 325 பல்கலை.களுடன் ஆசியாவில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற இரண்டாவது நாடாக இந்தியா அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆசிய பல்கலை. தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் பெங்களூரு ஐஐசிஎஸ் மற்றும் 5 ஐஐடிக்கள் இடம்பெற்றுள்ளன. பிராந்திய அளவில் நிலவும் கடுமையான போட்டிகள் காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த 6 கல்வி நிறுவனங்களும் தரவரிசையில் சற்றே சரிந்துள்ளன.

சரிவைச் சந்தித்த நிலையிலும், இந்திய கல்வி நிறுவனங்களிலேயே ஐஐடி டெல்லி முந்தைய ஆண்டின் 59வது இடத்திலிருந்து சற்று சரிந்த 66வது இடத்தைப் பிடித்து நாட்டின் மிக உயர்ந்த தரவரிசைப் பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இதைத் தொடர்ந்து, ஐஐடி மும்பை 71வது இடத்திலிருந்து தற்போது 83வது இடத்துக்கும் ஐஐடி மெட்ராஸ் கடந்தாண்டின் 70வது நிலையிலிருந்து 85வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதே போல், ஐஐடி கராக்பூர் 90வது இடத்தையும், ஐஐடி கான்பூர் 97வது இடத்தைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு பல்கலை.களும் கடந்தாண்டு 77வது இடத்தில் இருந்தன.

கடந்த ஆண்டு 95வது இடத்தில் இருந்த டெல்லி பல்கலைக்கழகம், இந்த முறை 10-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டாப் 100 பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளது.