Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை மகளிர் டி.20 தொடர்: இந்தியா-வங்கதேசம் நாளை அரையிறுதியில் மோதல்

தம்புல்லா: 9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி.20 வடிவில் இலங்கையின் தம்புல்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த போட்டியில் தாய்லாந்து அணியை, இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில், மலேசியாவை 114 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.

பி பிரிவில் முதல் 2 இடம் பிடித்த இலங்கை, வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, பி பிரிவில் 2ம் இடம் பிடித்த வங்கதேசத்துடன் மோதுகிறது. மற்றொரு அரையிறுதியில் இரவு 7 மணிக்கு பாகிஸ்தான்-இலங்கை மோதுகின்றன.