புதுடெல்லி: ராணுவத்திற்காக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க, பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடிக்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய நிறுவனத்திடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தின் கீழ், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.2,095.70 கோடி மதிப்பிலான ஐஎன்விஏஆர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
