வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிக்கு பிடிவாரன்ட்
Advertisement
இந்த வழக்கு விருதுநகர் ஜேஎம்.2 நீதிமன்றத்தில், நீதிபதி ஐயப்பன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரிச்சியூர் செல்வம், கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், சதீஷ்குமார், பாலசுப்பிரமணியம், டேனியல் சகாயபாபு, சென்னை புழல் சிறையில் உள்ள லோகேஷ் ஆகிய 6 பேர் ஆஜராகினர்.வரிச்சியூர் செல்வத்தின்
கூட்டாளி மும்பையை சேர்ந்த ஈஸ்வர் சாய் தேஜூ ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி ஐயப்பன், வழக்கு விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Advertisement