நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்
Advertisement
நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் நெல்லையில் ஜூலை 27ல் இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கவின் ஆணவக் கொலை வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை சரவணன், ஜெயபாலன் கைது செய்துள்ளனர். 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சுர்ஜித் தாயார் கைது செய்யப்படவில்லை. கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதாக அரசு தரப்பில் வாதம் செய்துள்ளது.
Advertisement