யமுனாநகர்: அரியானா மாநிலம் யமுனாநகரில் ஹத்னிகுண்ட் தடுப்பணை அருகே யமுனை ஆற்றில் ராணுவப் படகு கவிழ்ந்ததில் 2 வீரர்கள் மாயமாகினர். கடந்த 1 ஆம் தேதி அங்கு ராணுவம் மற்றும் பிற படையினரின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அப்போது சுழலில் சிக்கிய படகு திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த 2 வீரர்கள் நீரில் மூழ்கினர். இதையடுத்து ராணுவம், விமானப்படை, உள்ளூர் போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான வீரர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement



