பணி: அசிஸ்டென்ட் கமாண்டெண்ட் (சிஏபிஎப்):
மொத்த காலியிடங்கள்: 349 (பிஎஸ்எப்-108, சிஆர்பிஎப்-106, ஐடிபிபி-12,
எஸ்எஸ்பி-52, சிஐஎஸ்எப்-70).
வயது: 01.08.2026 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்ச உயரம் 165 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 81 செ.மீ., 5.செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர்கள் 150 செ.மீ., இருக்க வேண்டும்.
ஆண்கள் 800 மீட்டர் தூரத்தை 3.45 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4.45 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். ஆண்கள் 3.5 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். பெண்கள் 3 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். ஆண்கள் 4.5 மீட்டர் தூரம் குண்டு எறிய வேண்டும்.யுபிஎஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.எழுத்துத் தேர்வு வருகிற ஜூலை 19ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையி்ல் நடைபெறும்.
கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (12.03.2026).


