பணி: லெப்டினென்ட் (என்சிசி- ஸ்பெஷல் என்ட்ரி) (124வது கோர்ஸ்-).
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது வரம்பு: 01.07.2026 தேதியின்படி 19 முதல் 25க்குள்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று என்சிசி பயிற்சியில் குறைந்த பட்சம் ‘பி’ கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போரில் இறந்தவர்களின் வாரிசுகள் என்சிசி பயிற்சி பெறாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம்.
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., தூரத்தை 13 நிமிடங்களுக்குள் ஓடிக்கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-25, புஷ்அப்ஸ்-15, புல்அப்ஸ்-2, ஸ்குவாட்ஸ் எடுத்தல், லங்க்ஸ் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும் மற்றும் 25 மீட்டர் தூரம் நீந்துதல், கயிறு ஏறுதல் ஆகிய உடற்திறன் சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும்.எஸ்எஸ்பி தேர்வு 2026 அக்டோபரில் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் இ.மெயிலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஏசி-3 டயர் ரயில்/பஸ் கட்டணம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் இ.மெயிலில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உதவித் தொகையுடன் 6 மாதங்கள் அதிகாரி பணிக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.


